Skip to main content

Racial discrimination (brochure)

ஒன்ராறியோ மனித உரிமைகள் சட்டக்கோவை 

ஒன்ராறியோ மனித உரிமைகள் சட்டக் கோவை (The Ontario Human Rights Code ) சம உரிமைகளையும் வாய்ப்புக்களையும் வழங்குவதுடன் பாகுபாட்டிலிருந்தும் சுதந்திரம் அளிக்கிறது. ஒன்ராறியோவில் உள்ள ஒவ்வொருவரினதும் கெளரவத்தையும் பெறுமதியையும் அங்கீகரிக்கிறது. இது வேலைவாய்ப்பு, குடியிருப்பு வசதி, வாய்ப்புக்களும் சேவைகளும், தொழிற்சங்க ஒப்பந்தங்களும் அங்கத்துவமும்,  வணிகம் அல்லது வாழ்க்கைத் தொழில்சார்ந்த அமைப்புக்கள் போன்ற துறைகளுக்கு பொருந்தும். 

இந்த சட்டக்கோவையின் படி இனப்பாகுப்பாட்டிலிருந்தும் உபத்திரவத்திலிலிருந்தும் விலகியிருக்க ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இனம், வம்சம், நிறம், பிறப்பிடம், இனம், குடியுரிமை, சமயக் கோட்பாடு போன்ற அடிப்படைகளில் நீங்கள் வேறுபாடாக நடத்தப்படக்கூடாது. இந்தச் சட்டக் கோவை உள்ளடக்கும் வேலை, பாடசாலை, வாடகைக் குடியிருப்பு, சேவைகள் போன்ற துறைகளுக்கு இது பொருந்தும். சேவைகள், கடைகள், கடைத் தொகுதிகள், தங்கும் விடுதிகள், வைத்தியசாலைகள், பொழுதுபோக்கு வசதிகள், பாடசாலைகள் போன்றவற்றை உள்ளடக்கும். 

இனவெறியும் இனப்பாகுபாடும்

கனடாவில் வலிமையான மனித உரிமைச் சட்டங்களும் பாகுபாடு பற்றிக்கதைக்க அமைப்புக்களும் உண்டு. அதே நேரத்தில் எங்களிடமும் மரபுவழியான  இனவெறி உண்டு - ஆபிரிக்கர், சீனர்கள், யப்பானியர்கள், தென் ஆசியா மக்கள், யூதர்கள், முஸ்ஸீம் கனடியர்கள் உட்பட  மற்றைய குழுக்களிலும் குறிப்பாகப் பூர்வீககுடி மக்கள் மீதும். இந்த மரபுவழி கனடாவில் உள்ள எல்லா மக்களினதும்,

இனப் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் வாழ்க்கையைப் பாதிப்பதன் மூலம் எங்களுடைய அமைப்புக்களையும் கட்டமைப்புக்களையும் இன்றும் கூட பாதிக்கின்றது.

பாகுபாட்டுக்கு உட்படுத்தப்பட்ட சமூகங்களை, ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணைக்குழு (The Ontario Human Rights Commission) இனப் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்பட்ட சமூகம் என  விபரிக்கிறது. இனம் ஒரு சமூகக் கட்டுமானம். அதன் கருத்து என்னவென்றால் சமூகம் பூகோளரீதியான, சரித்திரரீதியான, அரசியல்ரீதியான, பொருளாதார்ரீதியான, சமூகரீதியான, கலாசாரரீதியான காரணிகளின் அடிப்படையிலும், பெளதீக குணாதிசியங்கள் அடிப்படையிலும் இனம் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.  இருந்தாலும் எதையுமே  இனப் பெருமையையோ, இன முற்கோள்களையோ நியாயப்படுத்த பயன்படுத்த முடியாது

இனவாதம் என்பது இனப் பாகுபாட்டை விட  ஒரு விரிவான அனுபவமும் நடைமுறையும் ஆகும்.  இனவாதம் என்பது ஒரு குழு இன்னொன்றை விட மேலானது என்ற நம்பிக்கை ஆகும். இனவாதம் இனவாதப் பகிடிகளிலும், அவதூறுகளிலும், பகைமைக் குற்றங்களிலும் வெளிப்படையாகக் காட்டப்படுகின்றது.  இது நடத்தைகளிலும் பெறுமானங்களிலும், வகை மாதிரியான (stereotypical) நம்பிக்கைகளிலும் ஆழமாக வேரூன்றி இருக்கலாம். சில சூழ்நிலமைகளில், ஆட்கள் தங்களிடம் இப்படியான நம்பிக்கைகள் இருப்பதைக் கூட உணர்வதில்லை. பதிலுக்கு  அவர்கள் தாம் காலத்துக்கூடாக படிவளர்ச்சியுற்று, அமைப்புக்களினதும் ஒழுங்கு முறைகளினதும் ஒரு பகுதியாகி, அதிகாரமுள்ள ஒரு குழுவின் ஆற்றலுடனும் சலுகையுடனும் தொடர்பானவர்களாகி விட்டவர்களாக  அனுமானிக்கின்றனர்.

இனப்பாகுபாடு இனவெறியின் சட்டவிரோதமான வெளிப்பாடு ஆகும்.  இது திட்டமிட்டோ அல்லது இல்லாமலோ ஆட்களை அவர்களின் இனத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தும் விளைவை உண்டாக்கும், மற்றவர்களில் அன்றி, அவர்களில் சுமைகளைச் சுமத்துவதை அல்லது சட்டக்கோவை உள்ளடக்கும் துறைகளில் சமுதாயத்திலுள்ள ஏனைய அங்கத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகளை இல்லாமல் செய்வதை அல்லது கிடைப்பதை எல்லைப்படுத்தும் எந்தச் செயலையும் உள்ளடக்கும். இனப்பாகுபாடு சம்பவிப்பதற்கான சூழ்நிலைகளில் இனம் ஒரு காரணியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.

இனரீதியான உபத்திரவம் பாகுபாட்டின் ஒரு வடிவம் ஆகும். இது, உங்களுடைய இனம் அல்லது வேறுவிடயம் தொடர்பான அடிப்படையில் கருத்துரை கூறல், பகிடிகள் விடல், பெயர்  சொல்லல், உங்களை அவமதிக்கும் படங்களை காட்சிக்கு வைத்தல் அல்லது நடத்தையை வெளிக்காட்டல், உங்களைப் புண்படுத்தல் அல்லது உங்களை கீழ்த்தரமாகக் காட்டல் போன்றவற்றை உள்ளடக்கும். 

குறைந்த விருப்பமுள்ள வேலை வழங்கப்படல், வழிகாட்டி அல்லது பயிற்சி வழங்க மறுக்கப்படல் போன்ற வகையில் இனப்பாகுபாடு அனேகமாக மிகவும் நாசூக்காக இருக்கும். ஏனைய வேலையாட்களை விட வேறுபட்ட வகையில் வேலைத் தரத்துக்கு முகம் கொடுத்தல், நீங்கள் பூர்வீக மக்களின்  மரபு வழி போலத் தோன்றினால்  உங்களுக்கு குடியிருப்பு மறுக்கப்படல் அல்லது வாகனம் ஓட்டும் போது காவல்துறையினரால் அல்லது கடைத்தொகுதியில் பாதுகாப்புப் பணியாளர்களினால் சந்தேகத்துக்குரிய விதத்தில் நோட்டமிடப்படல்  என்பனவும் இதே கருத்துப்படும்.

அமைப்புரீதியான இனப் பாகுபாடு  

பாகுபாட்டுக்காக மனமறிந்து தீர்மானித்து அல்லது  திட்டமிட்டு செய்யாத நாளாந்த விதிமுறைகள் கட்டமைப்புக்களினால் இனப் பாகுபாடு ஒரு நிறுவனரீதியான அல்லது ஒரு முழு அமைப்பு  மட்டத்தில்  நிகழலாம்.  ஒரு அமைப்பின் கட்டமைப்பின் பகுதியான நடத்தை மாதிரிகள், கொள்கைகள்,  செயல்முறைகள் அல்லது முழுப்பகுதியும் இனவாதப்படுத்தப்பட்ட ஆட்களில் பிரதிகூலத்தை ஏற்படுத்தலாம், அல்லது இனவாதப்படுத்தப்பட்ட  ஆட்களின் சரித்திரரீதியான பிரதிகூலங்களின் மரபு வழியையும் அவற்றின் தொடரும் தாக்கலையும் மீட்டிப்பார்க்கத் தவறலாம்.  இதன் கருத்து என்னவென்றால் நீங்கள் திட்டமிடாவிட்டாலும் விடயங்களைச் செய்யும் உங்களுடைய இயல்பான விதம்  இனப்பாகுபாட்டுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் எதிர்மறைவான விளைவை உண்டாக்கலாம். 

உதாரணம் : கல்விப்பகுதியில்,  திட்டமிட்ட முறையிலான பாகுபாடு பின்வருவனவற்றை உள்ளடக்கலாம்:
இனப்பாகுபாட்டுக்கு உட்படுத்தப்பட்ட  மாணவர்களை சர்வகலாச்சாலைக்குரிய திட்டங்களுக்குப் பதிலாக தொழில்சார் திட்டங்களை நோக்கி பிரித்தல்.
அத்துடன்  முன்னேற்றும் நடைமுறைகள் வெள்ளையினக் கல்வியாளரின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட கலாசாரரீதியானதும் அமைப்புரீதியானதுமான காரணிகளை நோக்கும் போது அதன் விளைவாக   தலைமைப் பதவிகளில் இனவாதப்படுத்தப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை குறையலாம். (அதிபர்கள் போன்ற )

இனவாத பாகுபாட்டை இனம் காணலும் உரைத்தலும்

அமைப்புகள், இனவாதப் பாகுபாடு அல்லது துன்புறுத்தல் நடப்பதை  அனுமதிக்காமலும் மன்னிக்காமலும் இருப்பதை நிச்சயப்படுத்துவதற்கு           கட்டாயமாக வழிகள் எடுக்க வேண்டும்.

தனி மனித அல்லது அமைப்புரீதியான வடிவங்களுள்ள இனவாதத்தை தடுக்கவும் அது பற்றி பேசவும் உதவக்கூடிய ஒரு நல்ல இன வாத எதிர்ப்பு திட்டத்தை உருவாக்கலே ஒரு நல்ல தொடக்கமாகும்.  அது பின்வருவனவற்றை உள்ளடக்கலாம்:

  • பொருத்தமான சூழலில் இனம் சம்பந்தமான எண்ணிக்கைத் தரவுகளைச் சேர்த்தல்
  • சரித்திரரீதியான இனம் சம்பந்தமான பிரதிகூலங்களைப் பதிதல்
  • தீங்கு விளைவிக்கக் கூடிய வேலையிடக் கலாசாரத்தை, கொள்கைகளை, செயல்முறைகளை, தீர்மானம் எடுக்கும் படிமுறைகளை மீட்டல்
  • இன வாதத்துக்கும், இனப்பாகுபாட்டுக்கும், துன்புறுத்தலுக்கும் எதிரான கொள்கைகளையும் கல்வித்திட்டங்களையும் உருவாக்கலும் செயற்படுத்தலும்

இன வாதத்துக்கு எதிரான திட்டம், அமைப்புக்கள் சம உரிமையையும், பல்வகைமை இலட்சியத்தையும் விருத்தி செய்தலைச் சுலபமாக்குவதுடன்  நல்ல தொழில் உணர்வையும் கொடுக்கும். 

மேலும் தகவல்களுக்கு

ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (The Ontario Human Rights Commission), இனவாதமும் இனப் பாகுபாடும் பற்றிய கொள்கை, போன்ற ஏனைய வெளியீடுகள் www.ohrc.on.ca என்ற இணையத்தளத்தில் கிடைக்கும்.

மனித உரிமைகள் பற்றிய முறையீடு செய்ய – மனுப் போட – ஒன்ராறியோவின் மனித உரிமைகள் இணக்கமன்றைத் (Human Rights Tribunal of Ontario) தொடர்பு கொள்ள –
கட்டணமற்ற தொலைபேசி (Toll Free): 1-866-598-0322
செவிப்புலனற்றோருக்கான கட்டணமற்ற தொலைபேசி (TTY Toll Free):  
1-866-607-1240
இணையத்தளம் (Website): www.hrto.ca

உங்களுக்கு சட்ட உதவி தேவையாயின் மனித உரிமைகள் சட்ட ஆதார நிலையத்தை (Human Rights Legal Support Centre) தொடர்பு கொள்ள:
கட்டணமற்ற தொலைபேசி (Toll Free): 1-866-625-5179
செவிப்புலனற்றோருக்கான கட்டணமற்ற தொலைபேசி (TTY Toll Free):
1-866-612-8627
Website: www.hrlsc.on.ca

ISBN/ISSN
PRINT: 978-1-4435-8679-5 | HTML: 978-1-4435-8680-1 | PDF: 978-1-4435-8681-8
Attachments

File name File size Actions
Racial discrimination_Tamil_accessible.pdf 587.52 KB Download
Attachments