நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா
”இந்த வேலையை உங்களால் கையாள முடியும் என உங்களுக்கு உறுதி உள்ளதா? இதற்கு நிறைய வலிமையும் ஆர்வமும் தேவை, அத்துடன் தொழில் ஆற்றல் உள்ள ஒருவரை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.”
”இந்தப் பயிற்சித் திட்டம் உங்களுக்குத் தேவையில்லை. உங்களுடைய வயதில், இதன் நன்மை என்னவாக இருக்கும்?”
“ இந்த வேலையைக் கையாளுவதற்கு மிகவும் முதிர்ச்சி உள்ள ஒரு விண்ணப்பதாரியைத் தான் நாம் எதிர்பார்க்கின்றோம்.”
“மாணவர்கள் இரைச்சலுள்ள, நம்பமுடியாத குடியிருப்பாளர்கள் ஆவார்கள்.
இது போன்ற கருத்துரைகள் வயதுப்பாகுபாட்டைக் காட்டலாம் – அதாவது வயது சம்பந்தமான அடையாளத்தையும் மனப்பான்மையையும் அடிப்படையாக வைத்து அனுமானங்கள் எடுப்பது. இளையவர்களும் முதியவர்களும் வயதுப்பாகுபாட்டை எதிர்நோக்கலாம். வயதைப் பொருட்படுத்தாமல் எல்லோரையும் உள்ளடக்கூடியதான வழிகளை நோக்காமல் இளையவர்களின் அல்லது முதியவர்களின் தேவையை மட்டும் அடிபடையாகக் கொண்டு ஒரு சமுதாயத்தை
நோக்குவது அல்லது வடிவமைப்பது கூட வயதுப்பாகுபாட்டை உண்டாக்குகிறது.
உங்கள் வாழ்க்கையில் எந்த கட்டத்திலாவது நீங்கள் பாகுபாட்டுக்கு முகம் கொடுக்கலாம், அத்துடன் சில வயதுக்குழுக்கள் வேறு வகையான பாகுபாடுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது.
வயதுப் பாகுபாட்டிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள்
ஒன்ராறியோ மனித உரிமைகள் சட்டக் கோவை ( Ontario Human Rights Code) ,வயதின் அடிப்படையிலான பாகுபாட்டிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறது. இந்தச் சட்டக்கோவை வயதை, 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டது என வரைவிலக்கணப்படுத்துகிறது. எனினும் தமது பெற்றோருடன் வசிக்காதவிடத்தில் 16 வயதினரும்அதற்கு மேற்பட்டோரும் கூட, குடியிருப்பு வசதிகளில் பாகுபடுத்தப்படாமல் பாதுகாக்கப்படுகின்றனர். இதன் கருத்து, சேவைகளை அளிக்கும் போது உங்களுடைய வயது, நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள், அல்லது வசிக்கிறீர்கள் என்பனவற்றுக்கு எதிராக உங்களை மக்கள் பாகுபடுத்த முடியாது.
முதியோருக்கான தள்ளுபடிகள் அல்லது இளையோருக்கான வேலைத் திட்டம் போன்ற சில விசேடமான திட்டங்களும் நன்மைகளும், வயதுடன் தொடர்பான உண்மையான தேவைகளுடன் தொடர்பானவை. இவ்வகையான திட்டங்களுக்கு அப்பால் உங்களுடைய வயது காரணமாக நீங்கள் நியாயமற்ற விதத்தில் நடத்தப்படும் போது அது வயதுப்பாகுபாடு ஆகலாம்.
18 வயதுக்கு மேற்பட்ட ஒருவராக:
எல்லோரையும் போல் வேலைவாய்ப்பில் சம சந்தர்ப்பம் கிடைக்க வேண்டிய உரிமை உங்களுக்கு உண்டு. உங்களுடைய வயதின் அடிப்படையில் ஒரு வேலையையோ, பயிற்சியையோ, பதவி உயர்வையோ உங்களுக்கு மறுக்கவோ அல்லது உங்களை ஓய்வு எடுக்கும் படி வற்புறுத்தவோ முடியாது. மிகச் சிறிய விதிவிலக்குகளைத் தவிர கட்டாய ஓய்வுக்கு ஒன்ராரியோவில் அனுமதி இல்லை.
எல்லோருக்கும் கிடைக்கும் அதே அளவில் மருத்துவ சிகிச்சை, ஏனைய சுகாதாரப் பராமரிப்பு போன்ற சேவைகள் கிடைப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.
மிகவும் கஷ்டம் என்றில்லாவிட்டால், நீங்கள் ஒரு முதியவராக இருந்தால் வாடகைக்கு விடுபவர்கள் அல்லது தங்குமிடம் தருபவர்கள் உங்களுடைய வயதுடன் தொடர்பான தேவைகளை ஈடுசெய்ய வாழும் இடத்தை அல்லது வீடமைப்பு ஒப்பந்தங்களை உங்களுக்கு ஏற்றதாக மாற்றி ( உதாரணம், மிகவும் பொருத்தமான ஒரு இடத்துக்கு நீங்கள் இடம் மாற அனுமதித்தல் ) அமைக்க வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கலாம்.
ஒரு வேலை கொடுப்பாளராக :
-
மக்களை, வேலைக்கமர்த்தலையோ, பயிற்சி அளித்தலையோ, பதவி உயர்வு கொடுத்தலையோ அவர்களின் வயதின் காரணத்தை வைத்து நீங்கள் மறுக்க முடியாது.
-
மறு சீரமைப்புச் செய்யும் போது அல்லது பணியாளர்களைக் குறைக்கும் போது முதிய வேலையாட்களை அல்லது வேறு வயதுக் குழுக்களை நியாயமற்ற முறையில் இலக்காக்காதீர்கள்.
-
முதிய வேலையாட்கள் உட்பட அதன் அனைத்து வேலையாட்களினதும் தேவைகளுக்கு, மதிப்பும் ஆதரவும் அளிப்பதுடன். உங்களுடைய வேலைத்தளம் பாகுபாட்டற்றதாகவும் இருப்பதை, நீங்கள் கட்டாயமாக உறுதி செய்துகொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கு சேவை வழங்குபவராக :
-
மக்களுக்கு சேவை வழங்கலை, வயதின் அடிப்படையில் நீங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ மறுக்க முடியாது,
-
முதியோரின் தேவைகளை நீங்கள் கட்டாயமாகப் பூர்த்தி செய்யவேண்டும். உதாரணத்துக்கு மருத்துவரின் அலுவலகங்கள், கடைகள் போன்ற இடங்களில் அல்லது பேரூந்து அல்லது சுரங்கவண்டிகளில் சிலருக்கு உங்களின் நேரத்தின் பெரும் பகுதி அல்லது இடவசதி தேவைப்படலாம்.
-
இளையோரின் முதிர்ச்சி, பொறுப்பு, அல்லது நடத்தை பற்றிய வகைமாதிரி அனுமானங்களினால் இளையோரை நீங்கள் வித்தியாசமாக நடத்த முடியாது ( உதாரணத்துக்கு அங்காடிகள், திரைப்பட அரங்குகள் போன்றவற்றில்)
வாடகைக்கு விடுபவர் அல்லது தங்குமிடம் தருபவராக :
-
குறைந்தளவு வாடகை தருகிறார்கள் என்பதற்காக முதிய குடியிருப்பாளர்களை நீங்கள் வெளியேற்ற முடியாது.
-
நல்ல குடியிருப்பாளர்களாக இருக்க மாட்டார்கள் என்ற அனுமானத்தில் இளையோருக்கு வாடகைக்கு விடுவதை நீங்கள் மறுக்க முடியாது.
-
முதியோருக்கு தங்குமிட வசதி அதிகம் கிடைப்பதற்கு வேண்டிய மாற்றங்கள் செய்வதற்கு நீங்கள் பொறுப்பானவராக இருக்கலாம், இது சாய்தளம், கண்ணுக்கு தெரியக்கூடியதான் தீ எச்சரிக்கை, அழைப்பு மணி, வேறுபட்ட அளவில் உள்ள கதவு கைப்பிடிகள், பதிவான அலுமாரிகள் அமைத்தல் போன்றவற்றையும் உள்ளடக்கும்.
மேலும் தகவல்களுக்கு
ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (The Ontario Human Rights Commission), வயதின் காரணமாக முதியோர்களுக்கெதிரான பாரபட்சம் பற்றிய கொள்கை, போன்ற ஏனைய வெளியீடுகள் www.ohrc.on.ca என்ற இணையத்தளத்தில் கிடைக்கும்.
மனித உரிமைகள் பற்றிய முறையீடு செய்ய – மனுப் போட – ஒன்ராறியோவின் மனித உரிமைகள் இணக்கமன்றைத் (Human Rights Tribunal of Ontario) தொடர்பு கொள்ள:
கட்டணமற்ற தொலைபேசி (Toll Free): 1-866-598-0322
செவிப்புலனற்றவர்களுக்கான கட்டணமற்ற தொலைபேசி (TTY Toll Free):
1-866-607-1240
இணையத்தளம் (Website): www.hrto.ca
உங்களுக்கு சட்ட உதவி தேவையாயின் மனித உரிமைகள் சட்ட ஆதார நிலையத்தை (Human Rights Legal Support Centre) தொடர்பு கொள்ள:
கட்டணமற்ற தொலைபேசி (Toll Free): 1-866-625-5179
செவிப்புலனற்றவர்களுக்கான கட்டணமற்ற தொலைபேசி TTY Toll Free:
1-866-612-8627
இணையத்தளம் (Website): www.hrlsc.on.ca
